×

ரைபகினா, சபலென்கா 4வது சுற்றுக்கு தகுதி: ஜெர்மனியின் ஸ்வெரேவ் அதிர்ச்சி தோல்வி

லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 3வது சுற்றில் நடப்பு சாம்பியனும் 3ம் நிலை வீராங்கனையுமான கஜகஸ்தானின் எலினா ரைபகினா, 26 வயதான இங்கிலாந்தின் கேட்டி போல்டருடன் மோதினார். இதில் 6-1, 6-1 என்ற நேர் செட்டில் ரைபகினா எளிதாக வெற்றிபெற்று 4வது சுற்றுக்குள் நுழைந்தார். 6ம் நிலை வீராங்கனையான துனிசியாவின் 28 வயது ஓன்ஸ்ஜபீர், 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில், கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்குவை வீழ்த்தினார்.

அமெரிக்காவின் மேடிசன் கீஸ், 6-4, 6-1 என உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக்கையும், 2ம் நிலை வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, 6-2, 6-3 என ரஷ்யாவின் அன்னா பிளிங்கோவாவையும், செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவோ 6-3, 7-5 என செர்பியாவின் நடாலிஜா கோஸ்டிக்கையும் வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய 4வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

ஆடவர் ஒற்றையரில் கிரீஸ் நாட்டின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், 6-4, 7-6, 6-4 என செர்பியாவின் லாஸ்லோ டிஜெரேவை வீழ்த்தி 4வது சுற்றுக்குள் நுழைந்தார். டென்மார்க்கின் ஹோல்கர் ரூன், ஸ்பெயினின் அலெஜான்ட்ரோ டேவிடோவிச்சை சாய்த்தார். ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 3-6, 6-7, 6-7 என இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். இன்று கால்இறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நடக்கிறது.

The post ரைபகினா, சபலென்கா 4வது சுற்றுக்கு தகுதி: ஜெர்மனியின் ஸ்வெரேவ் அதிர்ச்சி தோல்வி appeared first on Dinakaran.

Tags : Raibagina ,Sabalenka ,Sverev ,Germany ,London ,Wimbledon tennis ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…