×

செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே நடந்த ரவுடி கொலை சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே வெடிகுண்டுகள் வீசி, ஒரு ரவுடியை மர்ம கும்பல் கத்தியால் சரமாரி வெட்டி கொன்றது. இக்கொலை வழக்கு தொடர்பாக நேற்று மாலை மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு நாட்டு வெடிகுண்டுகள் வீசி, தாம்பரம் அருகே இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி லோகேஷ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இவர், கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற பாலாஜி கொலைவழக்கு தொடர்பாக, அன்றைய தினம் செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக வந்திருந்தார். பின்னர் வழக்கு விசாரணை மதியத்துக்கு ஒத்திவைக்கப்படவே, அங்குள்ள டீக்கடையில் தனது நண்பருடன் டீ குடிக்க சென்றிருந்தபோது, ஒரு மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகள் வீசி, கத்தியால் சரமாரி வெட்டி கொலை செய்திருந்தது.

இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். மேலும், மர்ம கும்பலை பிடிக்க 24 பேர் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதற்கிடையே, இவ்வழக்கு தொடர்பாக திண்டிவனம் நீதிமன்றத்தில் 7 பேர் சரணடைந்தனர். இந்நிலையில், ரவுடி லோகேஷ் கொலை வழக்கு தொடர்பாக நேற்று மாலை தாம்பரத்தை சேர்ந்த ஹரிஹரன் (எ) மணிகண்டன் (37) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே நடந்த ரவுடி கொலை சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Rudi murder ,Chengalputtu ,Court ,Chengalpattu ,Chenkalpattu ,Dinakaran ,
× RELATED சென்னையில் மழை, வெள்ள பாதிப்பு...