×

ஆளுநர் ரவி மீது புகார் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: ஆளுநர் ரவி மீது புகார் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். ஆளுநர் மீதான 15 பக்க புகார் கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கையை வெளியிட்டார். இந்த செயலுக்கு அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு உட்பட பலர் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு புறப்பட்டு சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இது தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆளுநர் ரவி மீது புகார் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

ஆளுநர் மீதான 15 பக்க புகார் கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ளார். செந்தில்பாலாஜி விவகாரத்தில் அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்ட நிலையில் குடியரசுத்தலைவருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

The post ஆளுநர் ரவி மீது புகார் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mukheri ,Governor ,Ravi ,President ,Troubati Murmu ,G.K. Stalin ,Chennai ,Republican ,Droubati Murmu ,Governor Ravi ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி நிர்வாகம் சீர்குலைய துணை...