வேலூர்: ஒரு பிரியாணி வாங்கினால் ஒன்று இலவசம் என அறிவித்த பிரியாணி கடைக்கு சீல் வைக்க வேலூர் ஆட்சியர் ஆணையிட்டுள்ளார். காட்பாடி அருகே புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் சலுகை அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் குவிந்தனர். பிரியாணி வாங்க குவிந்த மக்களால் காட்பாடி – வேலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தராததால் கடைக்கு சீல் வைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
The post ஒரு பிரியாணி வாங்கினால் ஒன்று இலவசம் என அறிவித்த பிரியாணி கடைக்கு சீல் வைக்க வேலூர் ஆட்சியர் ஆணை appeared first on Dinakaran.