×

தென்மேற்கு பருவமழையால் ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சி: தென்மேற்கு பருவமழை வலுக்க ஆரம்பித்துள்ளதால், ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பதுடன, நீர்மட்டமும் உயர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பொள்ளாச்சியை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஆண்டில் பெய்த பருவமழையை தொடர்ந்து, பிஏபி திட்டத்தில் உள்ள, 120 அடி கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் பல மாதங்களாக தொடர்ந்து 100 அடிக்கு இருந்தது. இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து தண்ணீர் வரத்து குறைவால், அணையின் நீர்மட்டமும் சரிய துவங்கியது.

இதில் கடந்த மாதம் இறுதியில் அணைக்கு தண்ணீர் வரத்து சொற்ப அளவிலே இருந்துள்ளது. இதனால் ஆழியார் அணையின் நீர்மட்டம் 54 அடியாக சரிந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை பெய்ய துவங்கியது. தற்போதும் அவ்வப்போது கன மழையாகவும், சில மணிநேரம் சாரலுடன் பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கடந்த சிலநாட்களாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமானது.

இதில் நேற்றைய நிலவரபடி வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. குடிநீர் தேவைக்காக மட்டும் 80 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது ஆழியார் அணையின் நீர்மட்டம் 60 அடியாக உள்ளது. பருவமழை தற்போது துவங்கியுள்ளதால், வரும் நாட்களில் வலுக்கும்போது அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும்போது, விரைவில் அணையின் முழு அடியையும் எட்ட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதுபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவ மழைப்பொழிவு தொடர்ந்திருப்பதால், டாப்சிலிப்பை அடுத்த மொத்தம் 72 அடி கொண்ட பரம்பிக்குளம் அணைக்கு தற்போது வினாடிக்கு 2200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் இந்த அணையின் நீர்மட்டம் 15 அடியாக இருந்தது. தற்போது 23 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

* கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை பெய்ய துவங்கியது. தற்போதும் அவ்வப்போது கன மழையாகவும், சில மணிநேரம் சாரலுடன் பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கடந்த சிலநாட்களாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமானது.

The post தென்மேற்கு பருவமழையால் ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Bairiyar Dam ,Pollachi ,south- ,Bhayar Dam ,Southwest Monsoon Dam ,Dinakaran ,
× RELATED கோடை மழையையடுத்து தக்காளி சாகுபடி...