×

செவ்வாய்தோறும் படியுங்கள் கரூரில் மக்கள் நீதிமன்றம்

கரூர், ஜூலை9:கரூர் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலமாக நடைபெற்ற வழக்குகளில் 26 வழக்குகளுக்கு தீர்வானது. இதில் ரூ.97 லட்சத்து 56 ஆயிரம் வசூல் ஆனது. இந்தியா முழுவதும் நீண்ட நாட்களான கிடப்பில் உள்ள வழக்குகளை முடிக்கும் பொருட்டு தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல் படியும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல் படியும் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவானது நேற்று நில அபகரிப்பு வழக்குகளுக்கு என தனித்துவமான மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.

இதில் கரூரில் ஒரு அமர்வும் குளித்தலையில் ஒரு அமர்வும் என மொத்தம் இரண்டு அமர்வுகள் நடைபெற்றது.இந்த அமர்வுகளில் 63வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 26 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. 26 வழக்குகளுக்கு தொகை ரூ.97,56,528 வசூலிக்கப்பட்டது. இதனை மாவட்ட நீதிபதி சண்முக சுந்தரம் துவக்கி வைத்தார். இதில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலர் சார்பு நீதிபதி பாக்கியம் செய்திருந்தார்.

The post செவ்வாய்தோறும் படியுங்கள் கரூரில் மக்கள் நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : People's Court ,Karur ,Karur District People's Court ,People's Court in ,Dinakaran ,
× RELATED செல்லாண்டிபாளையம் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள்