×

பெரம்பலூரில் தூய்மைப்பணி நகராட்சி தலைவர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூர், ஜூலை 9: பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை 16, 17-வது வார்டுகளில் மாஸ் கிளீனிங் எனப்படும் ஒட்டு மொத்த தூய்மைப்பணியை நகராட்சித்தலைவர் அம்பிகா தொடங்கி வைத்தார். பெரம்பலூர் நகராட்சி அரணாரையில் உள்ள 16,17வது வார்டுகளில் என் குப்பை- என்பொறுப்பு, என் நகரம்- என்பெருமை, சுத்தமே சுகாதாரம் என்ற பெயரில் மாஸ் கிளீனிங் எனப்படும் ஒட்டுமொத்த தூய்மைப்பணிகள் மற்றும் உறுதி மொழி ஏற்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகராட்சித்தலைவர் அம்பிகா லைமை வகித்து ஒட்டு மொத்த தூய்மைப்பணியை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராதா முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள் துரை காமராஜ், தனமணி, சேகர், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பெரம்பலூர் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர்கள் மோகன், சீனிவாசலு, துப்புரவு மேற்பார்வையாளர்கள் விநாயகம், கோபி, பாலு, சபரீசன், குமரவேல் ஆகியோர் மேற்பார்வையில் நகராட்சியின் 80 துப்புரவு பணியாளர்கள், தூய்மைப்பணிக்கான உபகரணங்களுடன் கலந்து கொண்டு அரணாரையில் உள்ள 16-வது, 17-வது வார்டுகளில் தூய்மைப்பணிகளை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக அரணாரை பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் என் குப்பை- என்பொறுப்பு, என் நகரம்- என்பெருமை, சுத்தமே சுகாதாரம் என்ற பெயரில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூரில் தூய்மைப்பணி நகராட்சி தலைவர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Swachhathwawe Municipal President ,Aranarai ,
× RELATED பெரம்பலூர் அருகே அரணாரை ஏரியில் மீன்பிடி திருவிழா