×

போலீசார் வாகன சோதனையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

திருமங்கலம், ஜூலை 9: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தும்மக்குண்டு உடையான்பட்டி சாலையில் நேற்று முன்தினம் இரவு சிந்துபட்டி எஸ்ஐ லிங்கசாமி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபரின் டூவீலரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அதில் 2 கிலோ கஞ்சா மற்றும் ரொக்க பணம் ரூ.36 ஆயிரத்து 890 இருந்தது. விசாரணையில் அவர் உடையான்பட்டியை சேர்ந்த பிரேம்குமார் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கஞ்சா, ரொக்க பணம், டூவீலரையும் போலீசார் கைப்பற்றி ரிமாண்ட் செய்தனர்.

The post போலீசார் வாகன சோதனையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tirumangalam ,Sindhupatti SI ,Dummakundu Vodyanpatti road ,Tirumangalam, Madurai district ,
× RELATED குளிக்கும்போது வீடியோ எடுத்து...