×

90 எஸ்.எஸ்.ஐக்களுக்கு ₹2 ஆயிரம் வெகுமதி

சேலம், ஜூலை 9: தமிழக காவல்துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றிய போலீசாருக்கு, சிறப்பு எஸ்.ஐ.பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதில் எந்தவித தவறும் இல்லாமல் பணியாற்றியவர்களுக்கு, ₹2 ஆயிரம் வெகுமதியும், நற்சான்றிதழும் வழங்கி பாராட்டப்படுவார்கள். இதன்படி, சேலம் மாநகரத்தில் 90 சிறப்பு எஸ்.ஐகளுக்கு வெகுமதியும் நற்சான்றிதழ் வழங்கும் விழா, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. மாநகர துணை கமிஷனர் லாவண்யா, 90 சிறப்பு எஸ்.ஐ.க்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அப்போது அவருடன் போலீசார் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது துணை கமிஷனர் லாவண்யா கூறுகையில், ‘பொதுமக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் அனைவரும் பணியாற்ற வேண்டும். நம்மை தேடி வருவோருக்கு சட்டத்தின்படி உதவிகளை செய்ய வேண்டும். பொதுமக்கள் மனம் புண்படும்படி பேசக்கூடாது. உங்களது உடலை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும். ஏதாவது பிரச்னை இருந்தால், அதிகாரிகளை சந்தித்து தெரிவித்தால், போதிய உதவிகள் செய்வோம். எனவே, உடல்நிலையை கவனத்தில் கொள்ளவேண்டும். லஞ்சம் என்ற பேச்சே இருக்க கூடாது,’ என அறிவுரை வழங்கினார்.

The post 90 எஸ்.எஸ்.ஐக்களுக்கு ₹2 ஆயிரம் வெகுமதி appeared first on Dinakaran.

Tags : Salem ,Tamil Nadu Police ,Dinakaran ,
× RELATED கைப்பந்து போட்டியில் வெண்கல பதக்கம்...