×

சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலில் 3 புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்

சென்னிமலை, ஜூலை 9: சென்னிமலை அருகே கீழ்பாவானி வாய்க்காலின் குறுக்கே 3 பழமையான பாலங்களை அகற்றிவிட்டு புதிய பாலங்கள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த வாய்க்காலில் பழுதடைந்துள்ள கரைகள், பாலங்கள், மதகுகள் ஆகியவை சீரமைக்க ரூ.710 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பழமையான பாலங்களான மண்ணாங்காடு வாய்க்கால் பாலம், எல்லை குமாரபாளையம் வாய்க்கால் பாலம் மற்றும் எக்கட்டாம்பாளையம் ஊராட்சியில் உள்ள புதுவலசு வாய்க்கால் பாலம் ஆகிய 3 பாலங்களும் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.

இந்த பாலங்கள் வழியே அதிக அளவில் வாகனங்கள் செல்வதால் பாலங்கள் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால், கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே இருந்த மண்ணாங்காடு வாய்க்கால் பாலம் மற்றும் எல்லை குமாரபாளையம் வாய்க்கால் பாலம் ஆகிய 2 பழுதடைந்த பாலங்களையும் அகற்றிவிட்டு நெடுஞ்சாலை துறையின் மூலம் கூடுதல் அகலத்துடன் புதிய பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றது. இதே போல், பொதுப்பணித்துறை சார்பில் புதுவலசு வாய்க்கால் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதால் பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

The post சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலில் 3 புதிய பாலம் கட்டும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kilibavani Canal ,Chennimalai ,Kilibawani Canal ,Dinakaran ,
× RELATED போலீஸ் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து