×

வெள்ளகோவில் ஊராட்சி பகுதியில் ரூ.6.69 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள்

திருப்பூர், ஜூலை9: வெள்ளகோவில் ஊராட்சி பகுதியில் ரூ.6.69 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகளை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன்,கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முதல்அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.6.69 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகள் தொடக்க விழா நடந்தது. இதனை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன் தலைமை தாங்கினார்.

இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் மேட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முதல்அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.67.48 லட்சம் மதிப்பில் முத்தூர் மூலனூர் ரோடு முதல் மேட்டுப்பாளையம் ஆதிதிராவிடர் காலனி வழியாக புஷ்பகிரிநகர் ரோடு வரையிலும், ரூ.76.32 லட்சம் மதிப்பில் என்.ஜி.எம். நெடுஞ்சாலை முதல் வேப்பம்பாளையம் செல்லும் சாலையையும், ரூ.37.26 லட்சம் மதிப்பில் புஷ்பகிரிமலை முதல் குழலிபாளையம் வரை செல்லும் சாலை, ரூ.48.83 லட்சம் மதிப்பில் மோளகவுண்டன்வலசு ஆதிதிராவிடர் காலனி முதல் வள்ளியம்மாள்நகர் வரை, வள்ளியரச்சல் ஊராட்சியில் முதல்&அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.49.70 லட்சம் மதிப்பில் காங்கேயம் கொடுமுடி சாலை முதல் தென்னங்கரைபாளையம் வழியாக வள்ளியரச்சல் செல்லும் சாலை, வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முதல்அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.49.50 லட்சம் மதிப்பில் என்.ஜி.எம். சாலை முதல் குருக்கத்தி வழியாக பாளையதான்காடு ஆதிதிராவிடர் காலனி வரையிலும், ரூ.41.72 லட்சம் மதிப்பில் ஒத்தக்கடை நட்ராயன் கோவில்சாலை முதல் ஏக்கத்தான்வலசு வரையிலும் என மொத்தம் ரூ.3.70 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைக்கப்பட்டது.

இதுபோல் பச்சாபாளையம் ஊராட்சி கொழிஞ்சிக்காட்டு வலசில் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.67.51 லட்சம் மதிப்பில் என்.ஜி.எம். தேசிய நெடுஞ்சாலை முதல் கொழிஞ்சிக்காட்டுவலசு வழியாக என்.ஜி.எம். தேசிய நெடுஞ்சாலை வரை, வீரசோழபுரம் ஊராட்சியில் வலசில் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ-.70.44 லட்சம் மதிப்பில் பகவதிபாளையம் சாலை முதல் பெரளைக்காட்டுவலசு வழியாக பொன்பரப்பி வரையிலும், நாகமநாயக்கன்பட்டி ஊராட்சியில் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.33.77 லட்சம் மதிப்பில் முத்தூர்,மூலனூர் ரோடு முதல் நாகமநாயக்கன்பட்டி ஊராட்சியில் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.49.87 லட்சம் மதிப்பில் முத்தூர்&மூலனூர் சாலை முதல் குமாரபாளையம் வரையிலும் என மொத்தம் ரூ.2.21 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புதுப்பை ஊராட்சி நாயக்கன்புதூரில் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.77.36 லட்சம் மதிப்பில் நாயக்கன்புதூர் முதல் செந்தலையாம்பாளையம் வரையிலும் என ரூ.6.69 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், வெள்ளகோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் வேலுச்சாமி, உதவி பொறியாளர்கள் செந்தில்குமார், கிருஷ்ணமூர்த்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

The post வெள்ளகோவில் ஊராட்சி பகுதியில் ரூ.6.69 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள் appeared first on Dinakaran.

Tags : Vellakoil panchayat ,Tirupur ,Ministers ,MU ,Saminathan ,Kayalvizhi Selvaraj ,Dinakaran ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...