×

வேளாண் சட்டத்தில் உள்ள இன் ஆல் பார்ம்ஸ் முறையை கைவிட வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா கோரிக்கை

சென்னை: வேளாண் சட்டத்தில் உள்ள இன் ஆல் பார்ம்ஸ் முறையை கைவிட வேண்டும் என்று வேளாண்மை துறை செயலாளர் சமயமூர்த்தியை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்: அண்டை மாநிலங்களில் செஸ்வரி விதிக்கப்பட்ட வேளாண் விளைபொருட்களுக்கு, மீண்டும் தமிழகத்தில் செஸ்வரி விதிப்பு என்பது விலைவாசி உயர்வுக்கு வித்திடும், இச்சட்டத்தில் இன் ஆல் பார்ம்ஸ் என்கின்ற வாசகத்தை நீக்கி, செஸ் வரி விதிப்பிலிருந்து மொத்த வணிகர்களையும் பல்வேறு வணிகப் பயன்பாட்டிற்கு மதிப்புக் கூடுதல் செய்து வணிகம் செய்பவர்களையும், நுகர்வோர்களையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ஏ.எம்.விக்கிரமராஜா கூறினார்.

The post வேளாண் சட்டத்தில் உள்ள இன் ஆல் பார்ம்ஸ் முறையை கைவிட வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : A.M. ,Wickramaraja ,Chennai ,Agriculture Department ,Samayamoorthy ,A.M. Wickramaraja ,Dinakaran ,
× RELATED மதுரையில் நாளை வணிகர் மாநாடு: கடைகளுக்கு விடுமுறை