×

ஜேஇஇ நுழைவுத்தேர்வில் வெற்றி பெறும் ரகசியம்: ஆகாஷ் மாணவர் ஆதித்யா அறிவுரை

சென்னை: இந்தியாவில் பொறியியல் படிப்புக்கு புகழ்பெற்ற என்ஐடி, ஐஐடி மற்றும் ஐஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ (ஜாயிண்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாம்) அவசியமாகிறது. சமீபத்தில் நடந்த ஜேஇஇ அட்வான்ஸ்டு 2023 நுழைவுத் தேர்வில் அகில இந்திய தரவரிசையில் சென்னையை சேர்ந்த ஆதித்யா நீரஜே 27வது இடத்தை பெற்று வெற்றி பெற்றுள்ளார். தனது வெற்றிப் பயணத்தை பகிர்ந்து கொண்ட ஆதித்யா, ஜேஇஇ தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவது எப்படி என வழங்கிய ஆலோசனையில் கூறியதாவது: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக, விரைவாக திருப்புதல் செய்வதற்கான பார்முலா புத்தகத்தை மாணவர்கள் தயாரித்து வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

ஜேஇஇ தேர்வில் என்சிஇஆர்டி மற்றும் அதுதொடர்பான ஸ்டட்டி மெட்டீரியல்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்படுகின்றன. எனவே அந்த புத்தகத்தில் எதையும் தவற விடக்கூடாது. அனைத்தையும் ஒன்றுவிடாமல் படிக்க வேண்டும். முந்தைய ஆண்டு கேள்வித் தாள்களை நன்கு படியுங்கள். குறிப்பாக கணிதத்தில் முந்தைய ஆண்டு கேள்வித்தாளில் கேட்கப்பட்ட அதே பேட்டர்ன் கணக்குகள் அதிகளவில் கேட்கப்படும். தினசரி கால அட்டவணையை உருவாக்கி அதை தவறாமல் கடைபிடியுங்கள். இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் அன்றைய பாடங்களை படித்து முடித்து விடுங்கள்.

என்னைப் பொறுத்த வரையில், ஜேஇஇ மெயின் மற்றும் அட்வான்ஸ்டு தேர்வுக்காக ஆகாஷ் நிறுவனத்தின் 2 வருட ஹைபிரிட் திட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு சேர்ந்தேன். ஆகாஷ் இன்ஸ்டிடியூட்டுக்கு உள்ள நற்பெயர் மற்றும் ஹைபிரிட் திட்டத்தின் உயர் தரம் ஆகியவற்றின் காரணமாக அங்கு சேர முடிவு செய்தேன். ஜேஇஇ தேர்வில் நான் வெற்றி பெற்றதில் ஆகாஷ் பெரும் பங்காற்றியது. ஆகாஷில் உள்ள அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் எனக்கு நன்கு ஆதரவளித்து வழிகாட்டியதுடன் சந்தேகங்களை முழுமையாக நிவர்த்தி செய்தனர். அது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை தந்தது. அதோடு எனது பெற்றோரும் நன்கு ஆதரவு தந்தனர். தேர்வுக்கான சரியான தயாரிப்பு, உறுதியான முயற்சிகள், அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகள் ஆகியவையே எனது வெற்றியின் ரகசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post ஜேஇஇ நுழைவுத்தேர்வில் வெற்றி பெறும் ரகசியம்: ஆகாஷ் மாணவர் ஆதித்யா அறிவுரை appeared first on Dinakaran.

Tags : JEE ,Aditya Aditya ,Aakash ,Chennai ,NIT ,IIT ,India ,Aditya ,Akash ,
× RELATED ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண்...