×

ஆளாளுக்கு அரசியல் பேசும்போது ஆளுநர் ஏன் அரசியல் பேசக்கூடாது?.. அண்ணாமலைக்கு கவர்னர் தமிழிசை கேள்வி

கோவை: ஆளாளுக்கு அரசியல் பேசும்போது ஆளுநர் ஏன் பேசக்கூடாது என்று அண்ணாமலைக்கு கவர்னர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். கோவை விமான நிலையத்தில் நேற்று தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அளித்த பேட்டி: வாழ்க்கையில் பிளசர் இருக்க வேண்டும், பிரஷர் இருக்கக் கூடாது. நானே இரண்டு மாநிலங்களில் பிரஷர்களை கடந்து தான் செல்கிறேன். அரசியல் பேச அனைவருக்கும் உரிமை உண்டு. ஆளாளுக்கு அரசியல் பேசும் போது ஆளுநர் ஏன் அரசியல் பேசக்கூடாது. போஸ்டர் ஒட்டி கருப்புக்கொடி காட்டுவது சரியான அரசியலாக இருக்க முடியாது. யாருக்கு வேண்டுமானாலும் அரசியல் பேச உரிமை இருக்கும்போது ஆளுநருக்கும் உள்ளது.

நான் தெரிவிக்கும் கருத்து அண்ணாமலைக்கு இல்லை. ஆளுநர்கள் அரசியல் பேசலாம் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியுள்ளேன். ஓட்டல்களில் அரசியல் பேசக்கூடாது என எழுதி இருப்பார்கள், ஆனால் அதற்கு கீழ் உட்கார்ந்து தான் அரசியல் பேசுவார்கள். அரசியல் இல்லாமல் ஒரு நொடியும் கிடையாது. கட்சித் தலைவர் போல ஆட்சித் தலைவர்கள், ஆளுநர்கள் அரசியல் பேசலாம். ஆளுநர்கள் கருத்தை சொல்லலாம். உடன்பாடு இல்லை என்றால் இல்லை என்று சொல்லிவிட்டு போங்கள். உங்கள் மனநிலையில் தான் ஆளுநர் பேச வேண்டும் என நினைக்கக் கூடாது. நான் தமிழ்நாடு ஆளுநரை பற்றி பேசவில்லை என்னைப் பற்றி பேசுகிறேன் என்றார்.

காவலர்களுக்கு சங்கம் வேண்டும்
ஆளுநர் தமிழிசை கூறுகையில், காவலர்கள் சங்கம் வைக்க வேண்டும். அவர்களின் கோரிக்கை, நியாயத்தை ஆட்சியாளர்கள் பார்க்க வேண்டும். அரசியல் அழுத்தமும் காவல்துறையில் உள்ளது. டிஐஜி மரணமே இதில் இருந்து பாடத்தை சொல்கிறது. தற்கொலை ஒன்றே தீர்வு கிடையாது. தற்கொலைக்கு அழுத்தமான காரணம், தூண்டுதல் உள்ளது. அதை கண்டுபிடிக்க வேண்டும். உயர் அதிகாரி தற்கொலை என்றால் கடந்து போவதை விட்டுவிட்டு கடைந்து, ஆராய்ந்து ஏன் இந்த சூழ்நிலை என்று அறிய வேண்டும் என்றார்.

The post ஆளாளுக்கு அரசியல் பேசும்போது ஆளுநர் ஏன் அரசியல் பேசக்கூடாது?.. அண்ணாமலைக்கு கவர்னர் தமிழிசை கேள்வி appeared first on Dinakaran.

Tags : Governor ,Tamil Nadu ,Anamalai Govai ,Annamalayam ,Tamil ,Nadu ,Govai Airport ,Anamalai ,
× RELATED ஆளுநர் திடீர் டெல்லி பயணம்