×

கூட்டணி கட்சிகள் எதிர்ப்பால் நெதர்லாந்து பிரதமர் திடீர் ராஜினாமா

நெதர்லாந்து: குடியுரிமை மசோதா தொடர்பாக கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக பிரதமர் பதவியை மார்க் ரூட்டே ராஜினாமா செய்தார். நெதர்லாந்து அரசியலில் புலம் பெயர்ந்தோர் தொடர்பான விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இங்கு 4 கட்சி கூட்டணி ஆட்சியில் மார்க் ரூட்டே பிரதமராக பதவி வகித்து வருகிறார். இவர் அண்மையில் வௌிநாடுகளில் இருந்து நெதர்லாந்துக்கு புலம் பெயர்ந்தோருக்கு குடியுரிமை அளிப்பது தொடர்பான புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

ஆனால் இந்த மசோதாவுக்கு கூட்டணி கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக மார்க் ரூட்டே நேற்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து 150 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட நெதர்லாந்தில் விரைவில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கூட்டணி கட்சிகள் எதிர்ப்பால் நெதர்லாந்து பிரதமர் திடீர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Dutch ,Netherlands ,Mark Rutte ,Dinakaran ,
× RELATED சில்லி பாய்ன்ட்…