×

விம்பிள்டன் டென்னிஸ்: 4வது சுற்றில் மாயா

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹடாட் மாயா தகுதி பெற்றார். 3வது சுற்றில் ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டீயுடன் நேற்று மோதிய ஹடாட் மாயா 6-2, 6-2 என நேர் செட்களில் மிக எளிதாக வென்று காலிறுதிக்கு முந்தய சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி ஒன்றரை மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 3வது சுற்றில் செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா 6-3, 7-5 என்ற நேர் செட்களில் செர்பியாவின் நடாலியா ஸ்டீவனோவிச்சை வீழ்த்தினார்.

* உக்ரைனின் லெசியா சுரென்கோ – அனா போக்டன் (ருமேனியா) இடையே நடந்த 3வது சுற்று போட்டியில் லெசியா 4-6, 6-3, 7-6 (20-18) என்ற செட் கணக்கில் 3 மணி, 40 நிமிடம் போராடி வென்றார். டை பிரேக்கர் வரை மாரத்தான் போராட்டமாக நீடித்த 3வது செட் மட்டுமே 1 மணி, 49 நிமிடங்களுக்கு நீடித்தது புதிய சாதனையாக அமைந்தது.

* ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டன் (ஆஸி.) ஜோடி 6-2, 6-7 (5-7), 7-6 (10-8) என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் கில்லர்மோ துரன் – தாமஸ் மார்டின் எட்சவெர்ரி இணையை போராடி வென்றது. மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி – ஜீவன் நெடுஞ்செழியன் இணை குரோஷியாவின் ஐவன் டோடிக் – ஆஸ்டின் கிராஜிசெக் (அமெரிக்கா) ஜோடியிடம் 6-7 (5-7), 4-6 என்ற நேர் செட்களில் தோல்வியை சந்தித்தது.

The post விம்பிள்டன் டென்னிஸ்: 4வது சுற்றில் மாயா appeared first on Dinakaran.

Tags : Wimbledon Tennis ,Maya ,London ,Brazil ,Beatriz ,Wimbledon Grand Slam tennis ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை