×

பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல்

*டிஐஜி நேரில் ஆய்வு

பேரணாம்பட்டு : பேரணாம்பட்டு அருகே பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, டிஐஜி முத்துசாமி கொலை நடந்த இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தார். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த சாத்கர் கிராமத்தை சேர்ந்தவர் வளர்மதி(52). இவர் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்ற போது மர்மநபர்கள் காதுகளை அறுத்து காதில் இருந்த கால் சவரன் கம்மல்களை கொள்ளையடித்து கொண்டு கழுத்து அறுத்து கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர்.

தகவலறிந்த பேரணாம்பட்டு போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை பேரணாம்பட்டு காவல் நிலையம் முன்பு வளர்மதியின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் குற்றவாளிகளை கைது செய்ய கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், டிஎஸ்பி இருதயராஜ் மற்றும் பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் உட்பட போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் குற்றவாளிகளை கைது செய்வோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால், 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வேலூர் சரக டிஐஜி முத்துசாமி வளர்மதி இறந்து கிடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். சந்தேகத்தின் அடிப்படையில் வெவ்வேறு ஊர்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 10 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், 3 டிஎஸ்பிக்கள் கொண்ட தனிப்படை குழுவினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

The post பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : DIG ,Peranamptu ,Dinakaran ,
× RELATED ‘கூப்பிடும்போது எல்லாம் வரவேண்டும்’...