×

30 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !!

சென்னை : இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (08.07.2023) சென்னை, மயிலாப்பூர் சி.எஸ்.ஐ. செவித்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப் பள்ளியில் 30 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்.

கால்கள் பாதிக்கப்பட்ட 30 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக ரூ. 25,05,000/- (ஸ்கூட்டர் ஒன்றின் விலை ரூ.83,500/-) மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

இந்நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. த.வேலு, மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் திரு. கமல் கிஷோர், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் (பணிகள்) திரு. நே.சிற்றரசு, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையாக இணை இயக்குநர் திருமதி. ஜெயஷீலா மற்றும் தென் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. எஸ்.குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post 30 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !! appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Youth Welfare ,Development ,Udhayanidhi Stalin ,Chennai, Mylapore ,Dinakaran ,
× RELATED திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை