×

விம்பிள்டன் டென்னிஸ் ஜோகோவிச், ஸ்வியாடெக் 4வது சுற்றுக்கு தகுதி

லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த போட்டியில் நடப்பு சாம்பியனும் 2ம் நிலை வீரருமான 36 வயதான செர்பியாவின் ஜோகோவிச், சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவுடன் மோதினார். இதில் 6-3, 6-1, 7-6(5) என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றிபெற்று கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார். மேலும் பீட் சாம்ராசின் விம்பிள்டனில் தொடர்ச்சியாக 31 வெற்றி சாதனையை சமன் செய்தார். ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்லெவ், ரோமன் சஃபியுலின், கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் ஆகியோரும் 3வது சுற்றில் வென்று 4வதுசுற்றுக்குள் நுழைந்தனர்.

மகளிர் ஒற்றையர் 3வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 6-2, 7-5 என்ற செட் கணக்கில், குரோஷியாவின் பெட்ரா மார்டிக்வை வீழ்த்தினார். உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா, 7-6,6-2 என அமெரிக்காவின் சோபியா கெனினை, சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் 6-3, 6-1 என போலந்தின் மக்டா லினெட்டையும் வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தனர். அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, பெலாரசின் விக்டோரியா அசரென்கா, ஆகியோரும் 4வது சுற்றுக்குக்கு தகுதி பெற்றனர். 5ம் நிலைவீராங்கனையான பிரான்சின் கராலின் கார்சியாவை செக்குடியரசின் மேரி பௌஸ்கோவா, 7-6, 4-6, 7-5 என வீழ்த்தினார்.

The post விம்பிள்டன் டென்னிஸ் ஜோகோவிச், ஸ்வியாடெக் 4வது சுற்றுக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : Wimbledon Tennis ,Djokovic ,Sviatek ,London ,Grand Slam ,Wimbledon ,Dinakaran ,
× RELATED பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச்சை வீழ்த்திய சென்னை ஓபன் ரன்னர்!