×

உடுப்பி சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாது பெய்த கனமழை: தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி..!!

கர்நாடகா: தென்மேற்கு பருவமழையால் கேரளா, கர்நாடக மாநிலங்களில் இயல்பு வாழ்கை முடங்கியுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மங்களூரு பகுதியில் சாலையே தெரியாத அளவுக்கு மழைநீர் மூழ்கடித்தது. கேரளாவில் மலப்புரம், கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது.

கோட்டயம் மாவட்டத்தில் கொட்டி வரும் கனமழையால் வீடுகள் கடைகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் குடியிருப்பு பகுதிகள் வெள்ளகாடாக காட்சியளிக்கின்றன. கேரளாவின் பொன்னானி, குருவாயூர் சாலையில் குண்டு களவு என்ற இடத்தில் கனமழையால் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது. மரத்தின் கீழே நின்று கொண்டிருந்தவர்கள் முன்கூட்டியே சத்தம் கேட்டு அங்கிருந்து தப்பியோடியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடரும் கனமழையால் பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் தரை பாலங்கள் மூழ்கடிக்கப்பட்டு தண்ணீரில் வாகனங்கள் அடித்து செல்லப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. பீகார் மாநிலத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் தர்பங்கா காவல் நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள் ஆகியவை தண்ணீரில் மூழ்கியுள்ளன. வீட்டில் இருந்த பொருட்கள் அடித்து செல்லப்பட்ட நிலையில் அரசு அலுவலகங்களிலிருந்து ஆவணங்கள் தண்ணீரில் நனைந்து வீணாகின.

The post உடுப்பி சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாது பெய்த கனமழை: தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி..!! appeared first on Dinakaran.

Tags : Udupi ,Karnataka ,Kerala ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் சில மணி...