×

தேவகோட்டையில் இரு தரப்பினர் தகராறில் 3 பேருக்கு 3 ஆண்டு சிறை

 

தேவகோட்டை, ஜூலை 8: தேவகோட்டை அருகே மாடக்கோட்டையை சேர்ந்தவர்கள் கனகராஜ் (48), பாலு. சகோதரர்களான இருவரும் கடந்த 2018ல் குடும்பத்தாருடன் அருகில் உள்ள சாத்தமங்கலம் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றனர். அப்போது சாமி கும்பிடுவதில் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் கனகராஜ் காயமடைந்தார். கனகராஜ் தன்னை தாக்கியதாக பாலு, தினேஷ், விக்னேஷ், சரவணன், முருகையா, முருகேஸ்வரி ஆகியோர் மீது தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கு விசாரணை தேவகோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் நேற்று நீதிபதி மாரிமுத்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட பாலுவின் மகன் விக்னேஷ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 12 ஆயிரம் அபராதமும், சரவணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், முருகையாவிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் மட்டும் விதித்து உத்தரவிட்டார். மேலும் நீதிபதி, இவ்வழக்கில் இருந்து பாலு, தினேஷ், முருகேஸ்வரி ஆகியோரை விடுதலை செய்தார்.

The post தேவகோட்டையில் இரு தரப்பினர் தகராறில் 3 பேருக்கு 3 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Devakottai ,Kanagaraj ,Balu ,Matakottai ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு விழாவில் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்