×

காரியாபட்டி அருகே விவசாயி வீட்டில் நகை கொள்ளை

திருச்சுழி, ஜூலை 8: காரியாபட்டி அருகே விவசாயி வீட்டில் 4 சவரன் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரியாபட்டி அருகே உள்ள கிழவனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. விவசாயியான இவரது வீடு ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ளது. இவரது வீட்டில் மனைவி மற்றும் மருமகள் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் பெரியசாமி மற்றும் மனைவி, மருமகள் ஆகியோர் 100 நாள் வேலைக்கு சென்றுள்னர்.

இதனை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் மேல் வைக்கபட்டிருந்த சாவியை எடுத்து வீட்டின் உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து சுமார் 4 சவரன் மதிப்புள்ள தங்கச் சங்கிலி மற்றும் செல்போனை திருடிச் சென்று கதவை பூட்டி சாவியை எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரியதர்ஷினி கொடுத்த புகாரின் பேரில் காரியபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post காரியாபட்டி அருகே விவசாயி வீட்டில் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Kariyapatti ,Thiruchuzhi ,
× RELATED கணக்கனேந்தல் கிராமத்தில் பாழடைந்து...