×

சாலையோர புளியமரங்களை அனுமதியின்றி வெட்ட தடை

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூலை 8: அரூர் ஆர்டிஓ வில்சன் ராஜசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களில் உள்ள கிராமங்களில், குடியிருப்புகளின் மத்தியில் அமைந்துள்ள 2சி புளிய மரங்கள் அல்லது வேறு உயிருடன் உள்ள பச்சை மரங்கள், அவற்றின் மரக்கிளைகள், தங்களின் வீடுகளை விரிவாக்கி கட்டுவதற்கு இடையூறாக இருப்பதாக கருதி, அவற்றின் வேர்களை பலவீனப்படுத்தும் நோக்கில் தீ வைப்பது அல்லது ஆசிட் ஊற்றிறும் நிகழ்வுகள் குறித்து தகவல்கள், அவ்வப்போது வரப் பெறுகின்றன. இது மட்டுமன்றி நெடுஞ்சாலைத்துறை, மின்துறை, கல்வித்துறை, ஊராட்சி துறை ஆகியவைகளின் கட்டுமானங்கள் விரிவாக்கங்கள் நடைபெறும் போது, சம்பந்தப்பட்ட கட்டிட ஒப்பந்ததாரர்கள், அலுவலர்கள், அரூர் வருவாய் கோட்டாட்சியரின் ஆணை ஏதும் பெறாமல் அல்லது மாவட்ட பசுமை குழு தலைவர் மற்றும் தர்மபுரி கலெக்டரின் முன் அனுமதி இன்றி, மரங்களின் ஒரு பகுதியை வெட்டுவதும், பெரிய மரக்கிளைகளை வெட்டுவதும் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த செயல்கள் முற்றிலும் சட்டத்தை மீறிய செயல்கள் என எச்சரிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள், துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரூர் கோட்டத்தில் மரக்கிளைகள் வெட்டுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளக்கூடாது. இதை மீறும் நபர்கள் மீது, காவல் துறையில் புகார் அளித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post சாலையோர புளியமரங்களை அனுமதியின்றி வெட்ட தடை appeared first on Dinakaran.

Tags : Pappirettipatti ,Aroor ,RTO ,Wilson Rajasekhar ,Arur ,Dinakaran ,
× RELATED நாய் கடித்து மான் சாவு