×

மறைமலைநகரில் உண்டு, உறைவிட பள்ளியில் மாணவர் சேர்க்கை: கலெக்டர் தொடங்கி வைத்தார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், புதிதாக உருவாக்கப்பட்ட அரசு மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் மாணவ – மாணவிகள் சேர்க்கைக்கான அறிமுக கூட்டம் கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ராகுல்நாத் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர், கலெக்டர் ராகுல்நாத் பேசுகையில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்றைய தினம் மாணவ-மாணவிகளுக்கான அரசு மாதிரி உண்டு உறைவிட பள்ளி துவங்கப்பட்டுள்ளது.

இப்பள்ளியில் மாணவ – மாணவிகள் IIT, JEE, NEET மற்றும் CA Foundation ஆகிய படிப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம். பின்னர், இந்த அரசு மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியில் பயில்வதற்காக, 9ம் வகுப்பில் 160 பேர், 10ம் வகுப்பில் 160 பேர், 11 மற்றம் 12ம் வகுப்பில் 480 என மொத்தம் 800 மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சிறப்பான திட்டத்தை முன்னெடுத்து, கிராமப்புற மாணவ-மாணவிகள் பயன்பெற்று வாழ்வில் ஒளிரவேண்டும்’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர்கள் செங்கல்பட்டு ரவிச்சந்திரன், மதுராந்தகம் சாந்தி, அரவிந்தன், சுகானந்தம், மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் உதயகுமார், மண்டல ஒருங்கிணைப்பாளர் (மாதிரிப் பள்ளி) நவநீதகிருஷ்ணன், அரசு மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, பாலாமணி, அருணாசலம், கல்வி அறக்கட்டளை நிறுவனர் பேராசிரியர் அருணாச்சலம், தலைவர் மற்றும் தாளாளர் கணேஷ்குமார், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மறைமலைநகரில் உண்டு, உறைவிட பள்ளியில் மாணவர் சேர்க்கை: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Kiramalainagar ,Chengalpattu ,Chengalpattu District ,Kiramalainagar Municipality ,Department of School Education ,
× RELATED மறைமலைநகர் அருகே 5 ஆயிரம் நெல்...