×

பொதுச்செயலாளர் பதவி ஜெயலலிதாவே உயிரோடு வந்து கேட்டாலும் கட்சியைவிட்டு தூக்கிவிட்டதாக இபிஎஸ் கூறுவார்: மாஜி நிர்வாகி பேட்டி

விழுப்புரம்: திண்டிவனத்தில் கடந்த 5ம் தேதி அண்ணாமலை தலைமையில் நடந்த 39 ஜோடிகளுக்கு திருமண விழாவில் பங்கேற்று, அண்ணாமலையை புகழ்ந்து பேசி காலி விழுந்த அதிமுக ஜெ. பேரவைச் செயலாளர் முரளி (எ) ரகுராமனை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி உத்தரவிட்டார். இதுகுறித்து ரகுமான் நிருபர்களிடம் கூறுகையில், ‘கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வானூர் ஒன்றியத்தில் அதிமுகவைச் சேர்ந்த 11 ஒன்றியக்குழு உறுப்பினர்களை வெற்றிப் பெற வைத்தேன். தற்போது அரசியல் சூழ்நிலை காரணமாக, என் மகன் நடத்திய திருமண விழாவில் பள்ளி தாளாளர் என்ற முறைல் கலந்து கொண்டேன். அச்சிடப்பட்ட பத்திரிக்கையில் என் பெயர் எங்கும் இடம் பெறவில்லை.

அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக என்னை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர். என் மகன்கள் இருவரும் சி.வி.சண்முகத்திடம் 39 ஜோடிகளுக்கான திருமண அழைப்பிதழை நேரில் வழங்கினர். நிகழ்ச்சியை நன்றாக நடத்துங்கள் என்று மட்டும் கூறியுள்ளார். எனக்கு அளிக்கப்பட்ட பதவி அனைத்தும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்டன. அதிமுகவில் ஜெயலலிதாவின் விசுவாசிகளுக்கு இந்த நிலை தொடர்கிறது என்றால், என் நிலைதான் அதிமுகவில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்களுக்கும் உள்ளது. ஜெயலலிதா எழுந்து வந்து தன்னுடைய பொதுச் செயலர் பதவியைத் தருமாறு கேட்டால், தற்போதைய அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, உங்களையே கட்சியிலிருந்து எடுத்து விட்டதாகக் கூறுவார். எனது மகன் திருமண விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்த போது, உங்கள் மாவட்டச் செயலரை மீறி நான் வர முடியாது’ என்றார்.

The post பொதுச்செயலாளர் பதவி ஜெயலலிதாவே உயிரோடு வந்து கேட்டாலும் கட்சியைவிட்டு தூக்கிவிட்டதாக இபிஎஸ் கூறுவார்: மாஜி நிர்வாகி பேட்டி appeared first on Dinakaran.

Tags : J Jayalalithaa ,General Secretary ,EPS ,Villupuram ,Annamalai ,Tindivana ,Jayalalithaa ,General ,Dinakaran ,
× RELATED மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின்...