×

செங்கல்பட்டில் ஊரக வளர்ச்சித்துறை சங்கம் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளரை கண்டித்து, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், சங்கத்தின் மாவட்ட தலைவர் பரணி தலைமையில், பொருளாளர் பவுல்ராஜ் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் குணசேகரன், நகராட்சி அலுவலர் சங்க மாநில பொது செயலாளர் தாமோதரன் ஆகியோர் பேசுகையில், மாவட்டம் ஊரக வளர்ச்சி அலகில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், சங்க கோரிக்கையை ஏற்று ஊழியர்களை கலந்தாய்வு முறையில் பணியிட மாறுதல் அளிக்க கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டிருந்தார்.

கலெக்டரின் உத்தரவை மீறி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரார் (வளர்ச்சி) சில ஊழியர்களின் நலனுக்காவும், தன் சொந்த நலனுக்காகவும், அரசியல் பிரமுகர்களின் ஆதரவுடன், ஊழியர்களின் நலன் கருதாமல் தொடர்ந்து பணியிடை மாறுதலுக்கு பரிந்துரை செய்து வருகிறார். மேலும், ஊராட்சி செயலாளர்களின் பதவி உயர்வில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகிறார்’ என்றனர். இதில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post செங்கல்பட்டில் ஊரக வளர்ச்சித்துறை சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Rural Development Association ,Chengalpattu ,Rural Development Officers Association ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா