×

பாரம்பரியத்தை குறித்து பெருமை கொள்ள வேண்டிய நேரம்: உ.பி.யில் பிரதமர் மோடி பெருமிதம்

கோரக்பூர்: ‘‘நமது பாரம்பரியத்தை குறித்து பெருமைக்கொள்ள வேண்டிய நேரமிது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கோரக்பூர் சென்ற பிரதமர் மோடி, கோரக்பூர்-லக்னோ மற்றும் ஜோத்பூர்-அகமதாபாத் வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் ரயில்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் ரூ.498 கோடி மதிப்பிலான கோரக்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், \\” இந்த முறை கோரக்பூர் பயணமானது பாரம்பரியம் மற்றும் மேம்பாட்டு கொள்கைக்கு ஒரு தனித்துவமான உதாரணமாகும். பல நூற்றாண்டுகளுக்கு பின் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கனவு நிறைவேறப்போகிறது. இந்திய கடற்படைக்கு ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த கொடி அகற்றப்பட்டு மகாராஜ சத்ரபதி சிவாஜி முத்திரை பொறிக்கப்பட்ட புதிய கொடி மாற்றப்பட்டுள்ளது. தேசிய தலைநகரில் ஆங்கிலேய மரபுகளை பின்பற்றுகிறோம். எனவே தான் அவற்றை மாற்றும் பணியை நம்பிக்கையுடன் மேற்கொண்டோம். நமது பாரம்பரியம் மற்றும் மரபுகளுக்கு தகுதியான அங்கீகாரத்தை வழங்குகிறோம். தற்போது அடிமை சகாப்தத்தின் ராஜபாதையானது, கடமை பாதையாக (கர்தவ்யபாத் ) மாற்றப்பட்டுள்ளது. அடிமை மனப்பான்மையை முறியடித்து பாரம்பரியத்தை பற்றி பெருமிதம் கொள்ள வேண்டிய நேரம் இது”என்றார்.

தொடர்ந்து கீதா பிரஸ்சின் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: கீதா பிரஸ்சுக்கு ஒன்றிய அரசு காந்தி அமைதி விருதை வழங்கியுள்ளது. கீதா பிரஸ் 15 மொழிகளில் 1600 வெளியீடுகளை கொண்டுவந்துள்ளது. 1923ம் ஆண்டு கீதா பிரஸ் என்ற வடிவில் இங்கு ஏற்பட்ட ஆன்மிக ஒளி இன்றும் மனித குலத்தை வழிநடத்துகிறது. இந்த மனிதாபிமான பணியின் பொற்காலத்தை நாம் அனைவரும் கண்டுகளிப்பது நமது அதிர்ஷ்டம். இது இந்தியாவை இணைக்கிறது. இந்தியாவின் ஒற்றுமையை பலப்படுத்துகிறது. இதுபோன்ற ஒரு நிறுவனம் சமூக குறிக்கோள்களை எப்போதும் செழுமைப்படுத்தி மக்களுக்கு கடமையின் பாதையை காட்டுகின்றது. இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக சட்டீஸ்கரின் ராய்ப்பூரில் உள்ள அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கலந்து கொண்டு ரூ.7600கோடி ரூபாய் மதிப்பிலான 8 திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.  தொடர்ந்து கான்கர் மாவட்டத்தில் உள்ள அந்தகர் மற்றும் ராய்ப்பூர் இடையே புதிய ரயிலை பிரதமர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய சித்தாந்தம் ஊழல் என்றும் சட்டீஸ்கர் மாநிலம் அதன் ஏடிஎம் மையம் என்றும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

 

The post பாரம்பரியத்தை குறித்து பெருமை கொள்ள வேண்டிய நேரம்: உ.பி.யில் பிரதமர் மோடி பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,UP ,Gorakhpur ,Uttar Pradesh… ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில்...