×
Saravana Stores

தமிழ்நாட்டில் முதல் முறையாக கோவை மாநகரில் 6 தானியங்கி வேக அளவீடு கருவிகளைப் பொருத்த மாநகர காவல்துறை முடிவு

கோவை: தமிழ்நாட்டில் முதல் முறையாக கோவை மாநகரின் அவினாசி சாலை, சத்தியமங்கலம் சாலை மற்றும் பாலக்காடு சாலையில் 6 தானியங்கி வேக அளவீடு கருவிகளைப் பொருத்த மாநகர காவல்துறை முடிவு செய்துள்ளனர். 40 கி.மீ வேகத்தைக் கடக்கும் வாகனங்கள் கேமராவில் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு அபராதம் விதித்து ரசீது அனுப்பி வைக்கப்பட உள்ளது.

ஆண்டுதோறும் வாகனங்களின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முக்கிய நகரங்களில் ஒவ்வொருவரும் பணி நிமித்தமாக பல கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்களில் செல்ல வேண்டி உள்ளது. இதனால் விபத்துகளை தடுக்கும் வகையில் மாநகர போலீசார் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சாலை பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்துக்காக போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக போக்குவரத்து செயல் திட்டங்களை நவீனப்படுத்த சிக்னல்களில் தானியங்கி வேக அளவீடு கருவிகளைப் பொருத்த மாநகர காவல்துறை முடிவு செய்துள்ளது.

சாலைகளில் கார், பைக் ஆகியவை அதிவேகமாக சென்றால்,அவர்களுக்கு அபராதம் விதிக்க,வேகத்தை அளவிடும் கருவியின்திரையை 6 இடங்களில் வைத்திருக்கிறோம். வரும் காலத்தில் அதிகதிறன் கொண்ட கண்காணிப்புக் கேமரா வைத்து அதை திரையில்இணைத்து, அதிவேகத்துடன் செல்லும் வாகனங்கள் மீது தானியங்கி முறையில் விரைவில் அபராதம் விதிக்க உள்ளோம். வரும் காலத்தில் நிறைய திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன.

போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க ட்ரோன் வர உள்ளது. திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்கவும் புதிய திட்டங்கள் வரப்போகிறது. இதன் மூலம் வாகனங்களின் வேகங்கள் கணக்கிடப்படும். அதில் அளவுக்கு அதிகமான வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு கேமராவில் பதிவாகும் பதிவெண்ணை அடிப்படையாக வைத்து அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

The post தமிழ்நாட்டில் முதல் முறையாக கோவை மாநகரில் 6 தானியங்கி வேக அளவீடு கருவிகளைப் பொருத்த மாநகர காவல்துறை முடிவு appeared first on Dinakaran.

Tags : Municipal Police ,Govai City ,Tamil Nadu ,Govai ,Avinasi Road ,Satyamangalam Road ,Palakadu Road ,
× RELATED “ரங்கநாதன் தெருவை சுற்றிலும் 66...