×

எக்காலத்திலும் டிரெண்ட் இந்த ராப் டிரெஸ்

‘ஒரு பெண்ணாக உணர்ந்து ஆடை அணியுங்கள்’ (Feel like a woman, wear a dress) இப்படிச் சொன்னவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த உலக ஃபேமஸ் டிசைனர் மற்றும் ஃபேஷன் ஆராய்ச்சியாளர் டயான் வான் ஃபர்ஸ்டர்ன்பெர்க் (Diane von Furstenberg). 1974ல் அதிகாரப்பூர்வமாக ராப் டிரெஸ் பேட்டர்னை அறிமுகப்படுத்தியவர் இவர்தான். ராப் டிரெஸ் 1974ல் வெளியிடப்பட்ட பேட்டர்ன் இப்போதும் டிரெண்டில் இருப்பது எப்படி? என்ன ஸ்பெஷல் சொல்கிறார் ஃபேஷன் டிசைனர் நந்தா.

‘டயான்… இவங்க கான்செப்ட்டே பெண்மைக்குரிய அந்த வளைவுகளை ஹைலைட் பண்றதுதான். மிச்செல் ஒபாமாவுக்கு ரொம்பப் பிடிச்ச பேட்டர்ன் இந்த ராப் அல்லது மடக்கு உடைகள்தான். இந்த டிரெஸ் பேட்டர்ன்தான் டயானை மிகப்பெரிய டிசைனரா உலக அரங்கிலே நிற்க வெச்சது. பெண்கள், பெண்களா உடைகள் அணியறதைத்தான் ஆண்கள் மட்டுமில்ல பெண்களும் விரும்புவாங்க. அதுதான் இயற்கையும் எனில் ஒல்லியோ, பெல்லியோ, பருமனோ தான் செக்ஸியா, வளைவுகள் தெரிய உடை அணியறதை எந்தப் பெண்தான் வேண்டாம்னு சொல்வாங்க. அதுக்கு என்ன செய்ய முடியுமோ அதை சிறப்பா செய்யறதுதான் ராப் உடைகளுடைய வேலை. யாருக்கெல்லாம் ராப் உடை மிகக் கச்சிதமா இருக்கும்? யாரெல்லாம் கச்சிதமா மாத்தி அணியலாம்? தொடர்ந்தார் நந்தா.

‘பெண்கள் உடல் வடிவத்தை அஞ்சு வகையா பிரிக்கலாம். முக்கோண வடிவம், செவ்வக வடிவம், ஆப்பிள் வடிவம், மணல் கடிகார வடிவம், மற்றும் சுரைக்காய் வடிவம். இதிலே ஆப்பிள் வடிவம் மற்றும் மணல் கடிகார வடிவ உடல் கொண்டவங்க எந்த மெனக்கெடலும் இல்லாம இந்த ராப் உடைகளை பயன் படுத்தலாம். அவங்க வளைவுகளை மேற்கொண்டு ஸ்பெஷலா காட்டக் கூடிய திறன் இந்த ராப் உடைகளுக்கு உண்டு. ஆனால் சிறப்பு என்னன்னா வளைவுகளே இல்லாத உடல் வடிவம் கொண்டவங்க கூட இந்த ராப் உடைகளைப் போட்டுக்கும் போது செக்ஸியா உடலை காட்டும். ராப் உடைகளுடைய இன்னொரு ஸ்பெஷல் பெண்ணை பெண்ணா காட்டும், அதே சமயம் மாடர்ன், ஃபேஷன் , போல்ட் வுமனாகவும் காட்டக் கூடியவைகள் இந்த ராப் உடைகள்’ என்னென்ன உடைகளில் இந்த ராப் பேட்டர்ன்கள் வடிவமைக்கப்படுகின்றன தொடர்ந்து விளக்கினார் நந்தா.

‘ஆரம்பத்திலே ஜெர்ஸி, நைலான், பாலிஸ்டர் மெட்டீரியல்கள்லதான் இந்த பேட்டர்னை டயான் ரிலீஸ் செய்தாங்க. அமெரிக்கா மாதிரியான குளிர் நாடுகளுக்கு ஜெர்ஸி,பாலிஸ்டர்கள் செட் ஆகும், ஆனால் இந்தியா மாதிரியான வெப்ப நாடுகள்ல ஜெர்ஸி எல்லாம் ஸ்போர்ட்ஸ் உடைகள். மத்த நேரத்திலே நினைச்சுக் கூட பார்க்க முடியாது. அதற்கேற்ப லினென், காட்டன், ரேயான் இந்த மாதிரி மெட்டீரியல்கள்ல இந்த ராப் உடைகள் வரத் துவங்கி இன்னைக்கு இதிலேயே ஏகப்பட்ட உடைகள் டிசைன் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. குறிப்பா கழுத்துப் பகுதியை மட்டும் ராப் செய்து அல்லது கவர் செய்கிற மாடல், அடுத்து மார்புப் பகுதி வரை ராப் செய்துக்கற மாடல், பின் இடுப்புப் பகுதியில் ராப் செய்து அப்படியே முடிச்சுகள் இணைச்சுக் கட்டிக்கிற டைப் இப்படி மூணு பேட்டர்ன்கள்ல வர ஆரம்பிச்சிடுச்சு. மேலும் லண்டன், உள்ளிட்ட இங்கிலாந்து நாடுகள்ல வுல்லன், ஜீன்ஸ், கார்கோ மாதிரியான திக் மெட்டீரியல்கள்ல கூட ராப் டிரெஸ்களைப் பார்க்க முடியுது.

அதே போல் லாங் கவுன், ஷார்ட் கவுன், முட்டி வரை கவுன், மிடி கவுன், துவங்கி ஜீன் மேலே டாப், அனார்கலி குர்தா, காக்டெயில் குர்தா, ஏன் இன்னைக்கு புடவைக்கான பிளவுஸ்கள், கோட் இப்படிக்கூட ராப் பேட்டர்ன்களைப் பார்க்க முடியுது. அதிலும் ஆண்கள் பிளேஸர்கள்ல கூட இப்போ டிசைன் செய்ய ஆரம்பிச்சிட்டோம். ஆரம்பக் காலத்திலே நைட் உடைகள்லயும், கிச்சன் வேர்களாகவும்தான் இந்த ராப் உடைகள் கண்டுபிடிக்கப்பட்டுச்சு. அதை டிசைனர்கள் எல்ஸா(Elsa) மற்றும் கிளார் மெக்கர்டெல்(Claire McCardell) ரெண்டு பேரும் 1930 – 40கள்ல அறிமுகப் படுத்தினாங்க. ஆனால் 1974ல் டயான் எடுத்த முயற்சிதான் அதிகாரப்பூர்வமா ஃபார்மல் உடைகள்லயே இந்தப் பேட்டர்ன் வர ஆரம்பிச்சது. இதோ இப்போதும் பெண்களின் ஹாட் செக்ஸி சாய்ஸாக மாஸ் காட்டிகிட்டு இருக்கு இந்த ராப் உடைகள். இந்த உடைகள் இன்னமும் நகரத்துப் பெண்களை கடந்து எல்லா பெண்களுக்குமான உடைகளா மாறாம இருக்க ஒருமுக்கிய காரணம் லோ நெக். இதிலே பெரும்பாலும் கழுத்து டிசைன் கொஞ்சம் இறக்கமா இருக்கும். அப்படி தயங்குவோர் கிளிவ் பேட் அல்லது உள்ளே மேட்சிங்கான ஸ்லிப், இன்னர் கூட பயன்படுத்தினால் மேலும் அழகுக் கூட்டிக் காட்டும்.
– ஷாலினி நியூட்டன்

The post எக்காலத்திலும் டிரெண்ட் இந்த ராப் டிரெஸ் appeared first on Dinakaran.

Tags : Belgium ,
× RELATED புரோட்டான் பீம் தெரபி பற்றிய பயிற்சி...