×

கூடலூர் நகராட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறன் வளர்க்கும் திட்டம்

*நகராட்சி தலைவர் அறிவரசு தொடங்கி வைத்தார்

பெ.நா.பாளையம் : கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சியில் 10 அரசு பள்ளிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவ மாணவியரின் கற்றல் திறனை அதிகரிக்க நகராட்சி சார்பில் பல முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது. அதன்ஒரு பகுதியாக, அனைத்து அரசு பள்ளிகளிலும் பொது அறிவை வளர்க்கும் புத்தகங்கள், கற்றல் மற்றும் வாசிப்பு திறனை மேம்படுத்த சிறப்பு புத்தகங்கள், நாட்டின் நடப்பு குறித்த நிகழ்ச்சிகளை மாணவ மாணவியர் அறிந்து கொள்ள செய்திதாள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் திட்டத்தை தலைமை ஆசியர்கள் முன்னிலையில் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் அறிவரசு தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், ஆணையாளர் பால்ராஜ், துணை தலைவர் ரதிராஜேந்திரன், இல்லம் தேடி கல்வி நிர்வாகி அரிடா சுலோரி, வாசிப்பு இயக்கத்தை சேர்ந்த காளியண்ணன், நகரமன்ற உறுப்பினர்கள் முருகானந்தம், மணிமேகலை, செந்தில் குமார், ஜனார்தனன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அந்தோணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post கூடலூர் நகராட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறன் வளர்க்கும் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Kudalore Municipality ,Municipal President ,UN Balayam ,Kudalur Municipality ,Periyanayakanpalayam ,Gov ,Cuddalore Municipality ,
× RELATED ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள்: பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்