×

ஆஷஸ் 3வது டெஸ்ட்: பெற்றோர் முன் 5 விக்கெட் எடுத்தது மிகப்பெரிய மகிழ்ச்சி: மார்க்வுட் பேட்டி

லண்டன்: இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையே ஆஷஸ் தொடரின் முதல் 2 போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில் 3வது டெஸ்ட் நேற்று லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் வார்னர் 4, கவாஜா 13, லபுசென் 21, ஸ்மித் 22 ரன்னில் அவுட் ஆக மிட்செல் மார்ஷ் அதிரடியாக 118 ரன் விளாசினார். டிராவிஸ் ஹெட் 39 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 5, கிறிஸ் வோக்ஸ் 3, பிராட் 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில், பென் டக்கெட் 2, ஹேரி புரூக் 3, சாக் கிராலி 33 ரன்னில் அவுட் ஆகினர்.

நேற்றைய முதல்நாள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 68 ரன் எடுத்திருந்தது. 2வது நாளான இன்று ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ பேட்டிங்கை தொடர்ந்தனர். இதனிடையே நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் மார்க்வுட் அளித்த பேட்டி: எனது பெற்றோர் முன்னால் 5 விக்கெட் எடுத்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. அவர்களை ஸ்டாண்டில் பார்த்தது ஒரு அழகான தருணம். இந்த டெஸ்ட்டில் கட்டாயம் வெல்ல வேண்டும். தற்போது நாங்கள் நல்ல நிலையில் இருப்பதாக நினைக்கிறேன். இன்று ஸ்டெம்பை நோக்கியே பெரும்பாலான பந்துகளை வீசினேன் என்றார். நேற்று ஒரு ஓவரில் தொடர்ச்சியாக 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசி மார்க்வுட் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

The post ஆஷஸ் 3வது டெஸ்ட்: பெற்றோர் முன் 5 விக்கெட் எடுத்தது மிகப்பெரிய மகிழ்ச்சி: மார்க்வுட் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Ashes ,Markwood ,London ,Australia ,UK ,Leeds ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை