×

விம்பிள்டன் டென்னிஸ்: ரைபகினா, ஜெசிகா 3வது சுற்றுக்கு தகுதி

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்றில், கஜகஸ்தானின் 3ம் நிலை வீராங்கனையான எலினா ரைபகினா, 6-2, 7-6 என்ற செட் கணக்கில், பிரான்சின் அலிஸ் கார்னெட்டை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் 4ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, 6-1, 6-4 என்ற செட் கணக்கில், ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்ஸாவை வென்று 3வது சுற்றுக்குள் நுழைந்தார். ரஷ்யாவின் அனஸ்தேசியா 6-3, 7-5 என ஸ்லோவேனியாவின் காஜா ஜுவனையும், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் , 3-6, 6-4, 7-10 என அமெரிக்காவின் டேனியல் காலின்சையும் வீழ்த்தினர்.

குரோஷியாவின் டோனா வெக்கிச், பிரான்சின் கரோலின் கார்சியா, கனடாவின் பியன்கா ஆண்ரெஸ்கு உள்ளிட்டோரும் 3வது சுற்றுக்குள் நுழைந்தனர். விம்பிள்டன் தொடருடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த எஸ்டோனியா அனெட் கொண்டவீட் 1-6, 6-2 என செக்குடியரசின் மேரி பௌஸ்கோவாவிடம் தோல்வி அடைந்து விடைபெற்றார். ஆடவர் ஒற்றையர் 2வது சுற்றில் அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோ, பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் வெற்றிபெற்றனர். 9ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ்,அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோ தோல்வி அடைந்து வெளியேறினர்.

The post விம்பிள்டன் டென்னிஸ்: ரைபகினா, ஜெசிகா 3வது சுற்றுக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : Wimbledon Tennis ,Rybakina ,Jessica ,London ,Wimbledon ,Dinakaran ,
× RELATED சில்லி பாய்ன்ட்…