×

உளுந்து, மணிலா, நெல் விதைப்பண்ணை சான்றுகளை உதவி இயக்குநர் ஆய்வு

 

*விதைப்பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அறிவுரை

வந்தவாசி : வந்தவாசி அடுத்த புன்னை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உளுந்து, மணிலா, நெல் விதைப்பண்ணைகளில் விதை சான்று உதவி இயக்குனர் குணசேகரன் ஆய்வு மேற்கொண்டார். வந்தவாசி வட்டாரத்தில் கீழ்சீசமங்கலம், மருதாடு, ஓசூர், புன்னை, அமுடூர், வெண்மந்தை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள நடப்பு காரிப்பருவத்திற்கான உளுந்து, மணிலா, நெல் விதைப்பண்ணைகளை விதை சான்று மற்றும் அங்ககசான்றுகளை உதவி இயக்குநர் குணசேகரன் நேற்று ஆய்வு மேற்கொண்
டார்.
அப்போது தரம், உர மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, பிற ரக களவான்கள் குறித்தும், பூக்கும் மற்றும் காய்க்கும் பருவங்களில் எவ்வாறு பாதுகாக்கபடுகின்றது என்பது குறித்தும் ஆய்வு மேற்ெகாண்டார். இதனை தொடர்ந்து அலுவலக்தில் விதைப்பண்ணைகளில் இருந்து கிடைக்கப்பெரும் தரமான விதையினை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து சுத்தகரிப்பு செய்த பின்னர் பகுப்பாய்வு மேற்கொண்டு தேர்ச்சி பெற்ற விதை குவியல்களுக்கு சான்று அட்டைகளை வழங்கினார்.

பின்னர், உதவி இயக்குநர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:உளுந்து, மணிலா, விதையின் தேவை அதிகமாக இருப்பதால் உளுந்து, மணிலா விதைப்பண்ணை அமைக்க ஆர்வமுள்ள விவசாயிகள் தங்கள் பெயர்களை வந்தவாசி வேளாண்மை விரிவாக்க மையத்தில் பதிவு செய்து ஆதார விதையினை பெற்று விதைப்பண்ணை அமைக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு தேவை அதிகமாக உள்ளதால் இதனை பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம். இப்பருவத்திற்கு ஏற்ப விபிஎன் 8, 10, மற்றும் 11 உளுந்து ரகங்கள் அதிக மகசூல் தருவதோடு மஞ்சள் தேமல் நோய் எதிர்ப்புசக்தி மற்றும் அனைத்து பருவத்திற்கு ஏற்ற சீரான மகசூல் தரக்கூடிய தன்மை கொண்டவையாகும்.

எனவே குறைந்த காலத்தில் அதிக மகசூல் மற்றும் லாபம் தரக்கூடிய விதைப்பண்ணையினை அமைக்க வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி ஆதார விதையினை பெற்று பயன் அடைய வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது வந்தவாசி வேளாண்மை உதவி இயக்குநர் த.செல்லதுரை, விதைச்சான்று அலுவலர் சுந்தரமூர்த்தி, வேளாண்மை அலுவலர் தி.விஜயகுமார், உதவி விதை அலுவலர்கள் சுதாகர், லஷ்மிகாந்தன் இருந்தனர்.

The post உளுந்து, மணிலா, நெல் விதைப்பண்ணை சான்றுகளை உதவி இயக்குநர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Paddy ,Manila ,Vandavasi ,Smiley, ,Saint, Manila ,
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!