×

மூணாறு அருகே கேப் ரோடு மலைச்சாலையில் திடிரென மண் மற்றும் பாறை சரிவு

கேரளா: கேரளா மாநிலம் மூணாறு அருகே கேப் ரோடு மலைச்சாலையில் திடிரென மண் மற்றும் பாறை சரிந்து விழுந்துள்ளது. தொடர்மழையால் ஏற்பட்ட மண் மற்றும் பாறை சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். கேரளா மற்றும் கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அடுத்த 4 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருச்சூர் மாவட்டம் சாலக்குடியிலும் மலப்புரம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் வீசிய சூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள் முறிந்தும் வேரோடும் சாய்ந்தும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முறிந்த மரங்கள் மின் கம்பங்கள் மீது விழுந்துள்ளது. இதனால் மின் கம்பங்கள் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. முறிந்த மரங்கள் வீடுகள் மீது விழுந்ததில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. மழையோடு சூறாவளி காற்றும் வீசியதால் திருச்சூர் மலைப்புரம் மாவட்டங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

காசர்கோடு , கண்ணூர், கோழிகோடு, வயநாடு, மலபுரம், திருச்சூர், பாலக்காடு, இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், ஆலப்புழா, கொல்லம், திருவனந்தபுரம், இடுக்கி போன்ற கேரள மாநிலத்தின் மாவட்டங்கள் கனமழைக்கு மிகுந்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. போடி பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் போடிமெட்டு மலைச்சாலையில் அடுத்தடுத்து பாறை மற்றும் மண் சரிவு, மரங்கள் சாய்வது தொடா்கிறது.

இதனை தேசிய நெடுஞ்சாலைத்துறையினா் உடனுக்குடன் சரி செய்து வந்தனா். இதனிடையே போடிமெட்டு மலைப் பகுதியில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதில் பல இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. ஒரு இடத்தில் பாறையுடன் சோ்ந்து பெரிய மரம் ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் விழுந்தது. இதனால் வாகனங்கள் அனைத்தும் போடி முந்தல் சோதனை சாவடியிலும், போடிமெட்டில் உள்ள தமிழக சோதனை சாவடியிலும் நிறுத்தப்பட்டன.

 

The post மூணாறு அருகே கேப் ரோடு மலைச்சாலையில் திடிரென மண் மற்றும் பாறை சரிவு appeared first on Dinakaran.

Tags : Cape Road ,Thuraru ,Kerala ,Moonaru ,Raina ,Thiruaru ,Dinakaran ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...