×

இரட்டைமலை சீனிவாசனின் பங்களிப்புகளை நன்றியுடன் நினைவுகூர்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விடிவுக்காக ஓயாமல் குரல் கொடுத்த ‘திராவிடமணி’ இரட்டைமலை சீனிவாசனின் பங்களிப்புகளை நன்றியுடன் நினைவுகூர்வோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் குறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “தான் பெற்ற கல்வியறிவைக் கொண்டு, ஆதிதிராவிடர்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாள்.

லண்டன் சென்று ஐந்தாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்தபோதும், அச்சம் என்பதே இன்றி, அவருடன் கைக்குலுக்க மறுத்து, இந்தியாவில் நிகழ்ந்து வரும் தீண்டாமைக் கொடுமைகளை எடுத்துக் கூறியதுதான் அவரது நெஞ்சுரம். வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கருடன் நகமும் சதையும் போல இணைந்து தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் பேசினார்.

ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விடிவுக்காக ஓயாமல் குரல் கொடுத்த ‘திராவிடமணி’ இரட்டைமலை சீனிவாசனின் பங்களிப்புகளை நன்றியுடன் நினைவுகூர்வோம், சமத்துவத்துக்கான பயணத்தில் சமரசம் தவிர்த்து வெல்வோம்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post இரட்டைமலை சீனிவாசனின் பங்களிப்புகளை நன்றியுடன் நினைவுகூர்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் appeared first on Dinakaran.

Tags : Dumamalai Srinivasan ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Dravidamani ,Dummilamalai Srinivasan ,
× RELATED டாப்-10 தரவரிசையில் நுழைந்த செஸ் வீரர்...