×

உங்கள் சாதனைகள் எண்ணற்ற இளைஞர்களின் வாழ்க்கையில் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: தோனிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் என்றென்றும் தல தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உங்கள் சாதனைகள் மற்றும் உங்கள் பணிவான தொடக்கம் இந்தியா முழுவதும் உள்ள எண்ணற்ற இளைஞர்களின் வாழ்க்கையில், குறிப்பாக சாதாரண பின்னணியில் உள்ளவர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்னிகரற்ற தலைமை பண்பால் அனைவருக்கும் ஊக்கம் அளிக்க தோனி தனது பணியை தொடர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

தோனி பீகார், ராஞ்சியில் பிறந்தார். இவர் பான் சிங் மற்றும் தேவகி தேவி ஆகியோரின் மூன்று குழந்தைகளில் இளையவர் ஆவார். இவரது பெற்றோர் உத்தரகாண்டிலிருந்து ராஞ்சிக்கு குடிபெயர்ந்தனர். இவரது தந்தை சார்க்கண்டிலுள்ள மெகன் காலணி நிறுவனத்தில் குழாய் செய்குநராக பணியாற்றினார். இவர் ஒரு பக்கம் படிப்பையும் ஒரு பக்கம் கிரிக்கெட்டில் ஆர்வமாக இருந்தார். இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியினைத் தொடர்ந்து, 2005 டிசம்பரில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டார். தோனி தனது முதல் போட்டியில் 30 ரன்கள் எடுத்தார், அந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இரண்டாவது போட்டியில் தனது முதல் ஐம்பது ரன்களை பதிவு செய்தார். தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்தது. இதன் மூலம் ஐபிஎல் முதல் பருவ ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

தோனி ஒரு நாள் பன்னாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆட்டத்தினை முடித்துவைக்கும் திறன் கொண்டவர். ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருது ஆகியவை பெற்றுள்ளார். 42 வயதான எம்.எஸ். தோனி 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பைக்கு பின்னரே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்தார். அதன்பின்னர் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்றார். ஆனால் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் தோனி சென்னை அணியின் கேப்டனாக கலக்கி வருகிறார்.

டி20 உலகக்கோப்பை (2007), ஒருநாள் போட்டி உலகக்கோப்பை (2011), சாம்பியன்ஸ் ட்ராபி (2013) என மூன்று ஐசிசி ட்ராபிகளை வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே. இது கிரிக்கெட் உலகில் யாருக்கும் கிடைக்காத பெருமை ஆகும். முதல் டி20 உலகக்கோப்பையை வென்ற கேப்டனும் தோனி தான். 2009இல் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதன்முறையாக முதல் இடத்தை பிடித்தது. அந்த சாதனையும் தோனி கேப்டன்சியில் தான் வந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியே அடையாமல் தொடர்ந்து 11 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தினார்.

The post உங்கள் சாதனைகள் எண்ணற்ற இளைஞர்களின் வாழ்க்கையில் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: தோனிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Doni CM ,CM. G.K. ,Stalin ,Chennai ,Forever Dala ,Dhoni ,Chief Minister of India ,G.K. Stalin ,B.C. ,
× RELATED கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி...