×

அதிமுக சார்பில் மருத்துவ முகாம்

 

பேரையூர், ஜூலை 7: டி.கல்லுப்பட்டி அருகே டி.குன்னத்தூரில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில், ஒன்றிய செயலாளர் ராமசாமி, நிர்வாகிகள் பிச்சைக்கனி, பழக்கடை காளிராஜ் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய கழக கிளை நிர்வாகிகளிடம் உறுப்பினர்கள் சேர்க்கைக் படிவங்களை ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post அதிமுக சார்பில் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Beraiyur ,D.Kunnathur ,D.Kallupatti ,minister ,R.P. Udayakumar ,Dinakaran ,
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...