×

மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் பலி

 

இளையான்குடி, ஜூலை 7: இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் பூபாலன்(47). எலெக்ட்ரீசியன். நேற்று காலை சாலைக்கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பைப் லைனை சரி பார்த்துள்ளார். வீட்டின் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில், பூபாலன் தலை உரசியதில், மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்துள்ளார். படுகாயமடைந்த பூபாலனை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பூபாலன் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்ப்பதிவு செய்த சாலைக்கிராமம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

The post மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் பலி appeared first on Dinakaran.

Tags : Ilayayankudi ,Karupiya son Bhubalan ,Saali ,Saligram ,Dinakaran ,
× RELATED சூராணத்தில் நோய் பாதித்த நாய்கள் அதிகரிப்பு