×

நாகப்பட்டினம் மாவட்டத்தில் எலி மருந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தேவேந்திரன், வேளாண் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அபாயகரமான 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த ரேட்டால் என்ற எலி மருந்து விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவின்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட், மருந்து கடைகளில் எலி மருந்து விற்பதற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள், பொதுமக்கள் இத்தகைய மருந்தை எந்த ஒரு காரணத்துக்காகவும் வாங்க வேண்டாம். இம்மருந்து விற்பனை செய்வோரை கண்டறிய வேளாண்மை, உணவு பாதுகாப்பு, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மூலம் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. ஆய்வின்போது ரேட்டால் மருந்து விற்பனை செய்வது தெரிய வந்தால் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எலி மருந்து விற்பனை செய்வது குறித்து பொதுமக்கள் அறிந்தால் அருகில் உள்ள வட்டார பூச்சிமருந்து ஆய்வாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம். மேலும் வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) – 9894660954, திருமருகல் 9790543339, கீழ்வேளுர் -9159902046, கீழையூர் 9159902046, கீழையூர் 9842262514, வேதாரண்யம், தலைஞாயிறு -8825949902 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் எலி மருந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Nagapattinam district ,Nagapattinam ,Nagapattinam District Agriculture ,Devendran ,Agriculture Farmers Welfare Department ,
× RELATED நாகை அருகே நடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்று எரித்த கணவன்