×

பொதுமக்கள் வலியுறுத்தல் தோகைமலை பகுதியில் அரசு பள்ளிகளில் ஸ்மாட் வகுப்பு துவக்கம்

தோகைமலை: கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கபள்ளிகளுக்கு ஸ்மாட் கிளாஸ் வகுப்புகள் அமைத்து தர வேண்டும் என்று குளித்தலை எம்எல்ஏ மாணிக்கத்திடம் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தோகைமலை அருகே கூடலூர் ஊராட்சி பொம்மாநாயக்கன்பட்டி மற்றும் கல்லடை ஊராட்சி கீழவெளியூர் அரசு தொடக்கப்பள்ளிகளுக்கு 2022-2023ம் ஆண்டிற்கான குளித்தலை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஸ்மாட் கிளாஸ் வகுப்புகள் அமைக்கப்பட்டது. பின்னர் மாணவர்களின் பயன்பாட்டிற்காக புதிய ஸ்மாட் கிளாஸ் வகுப்புகளை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் தொடங்கி வைத்தார். இதில் தோகைமலை ஒன்றிய ஆணையர் பாலசந்தர், பொதுக்குழு உறுப்பினர் தர்மர், ஊராட்சி மன்ற தலைவர்கள் கூடலூர் அடைக்கலம், கல்லடை ராஜலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் வளர்மதி ஆசைக்கண்ணு, தலைமை ஆசிரியர்கள் ஜெஸ்டின் திரவியம், இடும்பன், விவசாயணி பாஸ்கர், ஐடிவிங் கலைகண்ணன், செல்வராஜ் உள்பட வட்டார கல்வி அலுவலர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், பள்ளி மேலாண்மை குழு தலைவர், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post பொதுமக்கள் வலியுறுத்தல் தோகைமலை பகுதியில் அரசு பள்ளிகளில் ஸ்மாட் வகுப்பு துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Tokaimalai ,Thokaimalai ,Dokaimalai ,Karur ,Dinakaran ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு