×

மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவிலில் பாலாலய பூஜை

 

பல்லடம், ஜூலை7: பல்லடம் மாதப்பூரில் முத்துக்குமாரசாமி மலை கோயில் அமைந்துள்ளது. 500 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் உள்ள முத்துக் குமாரசாமி சிலையும், பழனி முருகன் சிலையும் ஒரே உருவ ஒற்றுமையுடன் காணப்படுவது சிறப்பம்சமாகும். எனவே பழனி மலைக்குச் செல்ல முடியாதவர்கள் மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்குச் சென்று முருகனை தரிசிப்பது வழக்கம். இந்த கோவிலில் கடந்த 2007ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் கோபுர கலசம் உள்ளிட்ட இடங்களில் பராமரிப்பு பணிகள், புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பாலாலய நிகழ்ச்சி அதற்கான யாக பூஜை நடைபெற்றது.

இதில் திருப்பூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ராமசாமி, பொங்கலூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வக்கீல் எஸ்.குமார், பல்லடம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் லோகுபிரசாத், மாதப்பூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் பாலசுப்பிரமணியம், மாதப்பூர் ஊராட்சி முன்னாள் தலைவர் முத்துரத்தினம், பல்லடம் ம.தி.மு.க. நகர செயலாளர் வைகோ பாலு, அ.தி.மு.க.வை சேர்ந்த ஹரி மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவிலில் பாலாலய பூஜை appeared first on Dinakaran.

Tags : Balalaya Pooja ,Madhapur ,Muthukumaraswamy ,Temple ,Palladam ,Muthukumaraswamy Hill Temple ,Palladam Madhapur ,
× RELATED பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட திடலை பார்வையிட்ட ஒன்றிய அமைச்சர்