- காஞ்சிபுரம்
- பிட்லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
- உவேரி கிராமம்
- தின மலர்
காஞ்சிபுரம்: ஊவேரி கிராமத்தில் உள்ள பிடிலீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி ஆண்டு விழாவில், விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் அடுத்து ஊவேரி கிராமத்தில் அமைந்துள்ள பிடிலீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஆண்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் தலைவரும், முன்னாள் நீதிபதியுமான பொன்.கலையரசன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அறிவியல் மற்றும் மானுடவியல் துறை தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பழனிசாமி கல்லூரியின் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் அறங்காவலர்கள் அருள், ராமலிங்கம், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கல்லூரியின் இயக்குனர் அருளரசு, அறக்கட்டளை செயலாளர் சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். செங்கல்வராய அறக்கட்டளை கல்விக் குழுமங்களின் கல்வி ஆலோசகர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் டி.விஸ்வநாதன் கலந்துகொண்டு பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக வன்னியர் நலவாரியம் முன்னாள் உறுப்பினர் சி.சுப்ரமணியம், கிரியோடெக் பாஸ்கரன், எல்&டீ நிறுவனத்தின் தென்னிந்திய பொறுப்பாளர் மோகன்ராஜ், ஆராய்ச்சியாளர் விசுவநாதன், பல்தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் வெங்கட்ராமன் ஆகியோர் கலந்துகொண்டு, பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டு விழாவில், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சி முடிவில் இயந்திரவியல் துறை தலைவர் பூபதி நன்றி கூறினார்.
The post விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.