×

பாங்குராவில் சரக்கு ரயில்கள் மோதல் லோகோ பைலட்டுக்கு 20 மணி நேர வேலை: ரயில்வே மீது தொழிற்சங்கம் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மேற்குவங்க மாநிலம் பாங்குராவில் ஓண்டா என்ற இடத்தில் ஜூன் 25ம் தேதி நின்று கொண்டு இருந்த சரக்கு ரயில் மீது மற்றொரு சரக்கு ரயில் மோதியது. இதில் யாருக்கும் காயம் இல்லை என்றாலும் 8 பெட்டிகள் தடம் புரண்டன. 4 மணி நேரம் அந்த வழித்தடங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதுபற்றி விசாரணை நடத்திய ரயில்வே வாரியம் சரக்கு ரயிலை ஓட்டிய லோகோ பைலட் மற்றும் அவரது உதவியாளரை பணி நீக்கம் செய்தது. இதற்கு அகில இந்திய லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோசேசியன் கண்டனம் தெரிவித்து உள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜூன் 25 அன்று மேற்கு வங்க மாநிலத்தில் சரக்கு ரயில்கள் மோதிய விபத்தில் லோகோ பைலட் தூங்கியதை ஒப்புக்கொண்டார். இதற்கு அதிக நேரம் பணி தான் காரணம் என்பதை ரயில்வே மறந்து விட்டது.பணி நீக்கம் செய்யப்பட்ட லோகோ பைலட் ஒரு மாத காலத்திற்குள் 18 பயணங்களை மேற்கொண்டார். உதவி லோகோ பைலட் ஜி.எஸ்.குமார், இதே காலகட்டத்தில் 22 பயணங்களை மேற்கொண்டார். விபத்து நடந்த சமயத்தில் கூட ஜூன் 6ம் தேதி காலை 5.24 மணிக்கு கையெழுத்திட்டதிலிருந்து மறுநாள் அதிகாலை 1.20 மணிவரை குமார் 19.56 மணிநேரம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பாங்குராவில் சரக்கு ரயில்கள் மோதல் லோகோ பைலட்டுக்கு 20 மணி நேர வேலை: ரயில்வே மீது தொழிற்சங்கம் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Bangura ,Union ,New Delhi ,Onda ,Bankura, West Bengal ,
× RELATED ஒன்றிய அரசு செயலாளர்கள் மாற்றம்