×

மனுதாரருக்கு ரூ.25ஆயிரம் அபராதம் அரிக்கொம்பன் விவகாரத்தில் தாக்கலாகும் மனுக்களால் சோர்வாகி விட்டோம்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

புதுடெல்லி: அரிக்கொம்பன் யானை விவகாரத்தில் தாக்கல் செய்யப்படும் பொதுநல மனுக்களால் நாங்கள் சோர்வாகி விட்டோம் என தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மனுதாரருக்கு ரூ.25ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. கம்பம் மக்களை கதி கலங்க வைத்த அரிக்கொம்பன் யானை நீண்ட இழுபறிக்கு பின்னர் முண்டந்துறை வனப்பகுதியில் விடப்பட்டது. இருப்பினும் அதற்கு உடல் பாதிப்பு இருப்பதால் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வாக்கிங் ஐ பவுண்டேஷன் என்ற அமைப்பு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில்,\\”இடுக்கி மாவட்டத்தில் கிராமங்களுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய அரிக்கொம்பன் யானையை கண்டறியக் கோரியும், அந்த யானை எங்குள்ளது, அதன் நிலவரம் என்ன, உயிரோடு தான் உள்ளதா என்ற நிலவரத்தை வனத்துறை தரப்பில் வெளியிட உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில்,‘‘அரிக்கொம்பன் யானை விவகாரத்தில் தொடர்ச்சியாக தாக்கல் செய்யப்படும் பொதுநல மனுக்களால் நாங்கள் சோர்வடைந்து விட்டோம். இது எங்களுக்கு மிகவும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

மேலும் அரிக்கொம்பன் யானை எங்குள்ளது என்பதை எதற்காக அறிந்து கொள்ள விரும்புகிறீர்கள்? வனவிலங்குகள் எங்கே உள்ளன என்பதை நீங்கள் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? என சரமாரி கேள்வியெழுப்பிய நீதிபதிகள், கடுமையாக நடந்துகொள்ளாமல் இருப்பதால் இந்த நீதிமன்றத்தை மனுதாரர் அவர் எண்ணுவது போன்று நடத்தலாம் என்று நினைக்க வேண்டாம் என தெரிவித்த நீதிபதிகள், இதுபோன்ற கால விரயம் செய்யும் மனுவை தாக்கல் செய்த வாக்கிங் ஐ பவுண்டேஷன் என்ற அமைப்புக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதாக உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.

The post மனுதாரருக்கு ரூ.25ஆயிரம் அபராதம் அரிக்கொம்பன் விவகாரத்தில் தாக்கலாகும் மனுக்களால் சோர்வாகி விட்டோம்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Aricomban ,Supreme Court ,New Delhi ,Arikomban ,Punish ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...