×

திருப்போரூர் கந்தசாமி கோயில் நிலம் எஸ்எஸ்என் கல்லூரிக்கு பரிமாற்றம்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான நிலம் எஸ்எஸ்என் கல்லூரிக்கு பரிமாற்றம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்கள் திருப்போரூர், காலவாக்கம், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ளன. காலவாக்கம் கிராமத்தில் எஸ்எஸ்என் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரி வளாகத்தின் உள்ளே திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான 9 ஏக்கர் 47 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை குத்தகை அடிப்படையில் எஸ்எஸ்என் கல்லூரி பயன்படுத்தி வந்தது.

இந்நிலையில், இந்த நிலத்திற்கு பதிலாக வேறு இடத்தை கொடுப்பதாகவும், அறநிலையத்துறைக்கு சொந்தமாக கல்லூரி வளாகத்திற்கு உள்ளே இருக்கும் நிலத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் எஸ்எஸ்என் கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இதுகுறித்து இந்துசமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு காலவாக்கம் கிராமத்தில் எஸ்எஸ்என் கல்லூரி வளாகத்தில் உள்ள ரூ.9 கோடியே 46 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 9 ஏக்கர் 47 சென்ட் நிலத்தை அக்கல்லூரிக்கு வழங்குவது எனவும், அதற்கு பதிலாக சிறுதாவூர் கிராமத்தில் ரூ.10 கோடியே 60 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 17 ஏக்கர் 68 சென்ட் நிலத்தை பெறுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post திருப்போரூர் கந்தசாமி கோயில் நிலம் எஸ்எஸ்என் கல்லூரிக்கு பரிமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Tiruporur Kandasamy Temple ,SSN College ,Tiruporur ,Kandasamy Temple ,Tirupporur… ,Tirupporur Kandasamy Temple ,Dinakaran ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நாடகம்