×

அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஆசிரியர்களை கட்டிவிட்டு 3 சிறுவர்கள் தப்பியோட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். பல மாவட்டங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 18 வயதிற்கும் குறைவான இளைஞர்களை சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் இந்த அரசு கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைத்துள்ளனர். நேற்று முன்தினம் இந்த இல்லத்தில் இருந்த மாணவர்கள் 5 பேர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து, ஆசிரியர்களான குணசேகரன் மற்றும் பாபு ஆகிய இருவரையும் செங்கல்லால் தாக்கிவிட்டு 5 சிறுவர்கள் தப்பிச் சென்றனர். அப்போது, ஆசிரியர்களை அவர்கள் கட்டிப் போட்டுள்ளனர். இதில், இரு சிறுவர்களைப் பிடித்து மீண்டும் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 3 சிறுவர்களையும் செங்கல்பட்டு நகர காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த இல்லத்தில் அடிக்கடி பணியாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் என பலரை தாக்கிவிட்டு சிறுவர்கள் தப்பிச் செல்வது வழக்கமாக உள்ளது. இல்லையெனில் தாக்குதலில் ஈடுபட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நேரத்தை பயன்படுத்தி சிறுவர்கள் தப்பிச் செல்கின்றனர். கடந்த மாதங்களுக்கு முன்பு இந்த இல்லத்தில் பணியாற்றும் ஊழியர்கள், தங்களுக்கு பாதுபாப்பு இல்லை எனக் கூறி பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் காவலர்களை நியமிப்பதாக வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் உறுதியளித்த பிறகு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆனால், தப்போது வரை பாதுகாப்பு பணிக்கு காவலர்களை நியமிக்கவில்லை என கூர்நோக்கு இல்ல ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, இங்கு பாதுகாப்பு பணியில் காவலர்களை அமர்த்தினால் மட்டுமே இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என கூர்நோக்கு இல்ல வட்டாரத்தில் கூறப்படுகிறது.

The post அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஆசிரியர்களை கட்டிவிட்டு 3 சிறுவர்கள் தப்பியோட்டம் appeared first on Dinakaran.

Tags : Chengalpadu ,Chengalputtu Government Sharp House ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...