×

பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் 22.66 லட்சம் அபராதம் வசூல்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டியவர்களிடம் இருந்து கடந்த 11ம் தேதி முதல் 23ம் தேதி வரை 22.66 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை தூக்கி எறிபவர்கள் மற்றும் வாகனங்களிலிருந்து குப்பைகளை கொட்டுபவர்களின் மீதும், கட்டுமான கழிவுகளை பொது இடங்களிலும்,  சாலைகளிலும் கொட்டுபவர்களின் மீதும் நீர்நிலைகள் மற்றும் நீர்வழித்தடங்களில் குப்பைகளை எறிபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி கடந்த 11ம் தேதி முதல் 23ம் தேதி வரை பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களிடம் இருந்து 11,53,600 அபராதமும், பொது இடங்களில் கட்டுமான கழிவுகளை கொட்டிய  நபர்களிடம் இருந்து 11,12,400 அபராதமும் என மொத்தம் 22.66 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் 22.66 லட்சம் அபராதம் வசூல்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Municipal Activities ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED சென்னை மாநகராட்சியில் இணைய வழியில்...