×

டிவிட்டருக்கு போட்டியாக களம் இறங்கிய த்ரெட்ஸ்: தமிழ் எழுத்தின் ‘கு’ வடிவில் லோகோ

லண்டன்: டிவிட்டருக்கு மாற்றாக த்ரெட்ஸ் செயலியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. டிவிட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் உருவாக்கிய செயலிக்கு த்ரெட்ஸ் என்று பெயரிட்டுள்ளார். த்ரெட்ஸ் செயலி நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் லோகோ தமிழ் எழுத்தின் ‘கு’ வடிவில் அமைந்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த தளம் டிவிட்டரை போலவே முழுவதும் டெக்ஸ்டை அடிப்படையாக கொண்டு இயங்கும். த்ரெட்ஸ் செயலியின் பல அம்சங்கள் டிவிட்டரை ஒத்திருப்பதால், இந்த செயலி மஸ்கிற்கு தலைவலியாக மாறக்கூடும் என தெரிகிறது. த்ரெட்ஸ் தொடங்கிய உடனேயே உலகம் முழுவதும் ஆதரவு பெருகி உள்ளது. அறிமுகம் செய்த 24 மணி நேரத்தில் 3 கோடி பேர் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

The post டிவிட்டருக்கு போட்டியாக களம் இறங்கிய த்ரெட்ஸ்: தமிழ் எழுத்தின் ‘கு’ வடிவில் லோகோ appeared first on Dinakaran.

Tags : Twitter ,London ,Meta ,Mark Zuckerberg ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை