×

ராஜஸ்தான் தேர்தலை அசோக் கெலாட், சச்சின் ஒற்றுமையாக சந்திக்க முடிவு: கார்கே நடத்திய கூட்டத்தில் சமரசம்?

புதுடெல்லி: ராஜஸ்தானில் கட்சி பணி, தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்திய காங்கிரஸ் அம்மாநில தேர்தலை ஒற்றுமையாக எதிர் கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் நடந்தது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொது செயலாளர் கே.சி. வேணுகோபால், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் ரந்தவா, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் கெலாட் மட்டும் காணொலி மூலம் கூட்டத்தில் பங்கேற்றார். இது குறித்து பேசிய பொது செயலாளர் வேணுகோபால் கூறுகையில், ‘’முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிக்கவில்லை. அதே நேரம், காங்கிரஸ் இந்த தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொள்ள உள்ளது,’’ என்று தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் கார்கே, ‘’ராஜஸ்தானில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் என அனைத்து தரப்பினரும் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இவர்கள் அனைவரது விருப்பங்களையும் காங்கிரஸ் நிறைவேற்றும்,’’ எனக் கூறினார்.

The post ராஜஸ்தான் தேர்தலை அசோக் கெலாட், சச்சின் ஒற்றுமையாக சந்திக்க முடிவு: கார்கே நடத்திய கூட்டத்தில் சமரசம்? appeared first on Dinakaran.

Tags : Ashok Kelad ,Sachin ,Rajasthan ,Karke ,New Delhi ,Congress ,Umstate ,Ashok Kelat ,Dinakaran ,
× RELATED அரசு பஸ் டிரைவருடன் தகராறு...