பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே அம்மையார்குப்பம் கிராமம் வேகமாக வளர்ந்து வருகின்றது. பள்ளி, வங்கி, கடைகள், மருத்துவமனை, மின்வாரிய அலுவலகம், திருமண மண்டபங்கள் உள்ளது. பல்வேறு பணிகளுக்காக 3000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் அம்மையார்குப்பம் வந்து செல்கின்றனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பஜார் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டு பயணிகள், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதல் ஆந்திரா பேருந்து நிறுத்தம் வரை சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்பது கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. ஊராட்சி மன்றம் சார்பில் பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. இருப்பினும் சாலையை விரிவுப்படுத்த நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், நேற்று பள்ளிப்பட்டு நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு சிபிஎம் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 50க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டு அம்மையார்குப்பத்தில் போக்குவரத்து நெரிசலை தடுக்க சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
The post சாலை விரிவாக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.